கால் நோக காத்திருந்து ..
கூட்ட நெரிசலில் அகப்பட்டு ..- there are as many stories in this world as there are people -
Monday, 6 October 2014
பார்வை
Saturday, 9 August 2014
Lost in infinity
I bury myself
in thoughts
in thoughts
of what if's
and why not's
and why not's
I try so hard
to gain control
but it just gets deeper
like a rabbit hole
I lay face down -
layers of apprehensions
and ruminations
and ruminations
weighing me down
Can't seem to find
a way out
a way out
deeper in my mind,
I go about
Deeper I go
losing myself
in infinite loop
in infinite loop
Little do I know
that it is just
a black hole
with no hope
a black hole
with no hope
Monday, 14 July 2014
Look out
Look out..
For that innocent smile,
On a crowded bus
For those pants that still fit,
When you’re thirty plus
Look out..
For that sound of an ice-cream truck,
On a Sunday afternoon
For that shooting star
On a dark sky with no moon
Look out
For the words
That need not be spoken
For the silence
That need not be broken
Look out
For those hands that hold you,
When you fall
For that bit of strength,
When you feel small
Look out
‘Cause what you see,
Might just not be it
And if you look beyond,
You might just be able to get it
Look out
For the hope
Behind every pain
For the sunshine
Behind every rain
Saturday, 24 May 2014
Missing pieces
Is this how
it is supposed to be?
always wondering where
the missing piece would be?
We try so hard
looking for the pieces
to complete the puzzle
hoping the despair ceases
Some pieces fit just perfectly
like they were meant to be
but some pieces just go missing
like a needle in the sea
We look for them everywhere
around , above and below
But the pieces may even come
from a stranger who just said 'hello'
Is this how
it is supposed to be?
Is life all about
"this is meant to be" ?
Maybe we've got it all wrong
about the pieces, all along
it is where they come from
and how our life has become
maybe it is for us to find out
what the puzzle is all about
But I'm just wondering
Is this how
It is supposed to be?
it is supposed to be?
always wondering where
the missing piece would be?
We try so hard
looking for the pieces
to complete the puzzle
hoping the despair ceases
Some pieces fit just perfectly
like they were meant to be
but some pieces just go missing
like a needle in the sea
We look for them everywhere
around , above and below
But the pieces may even come
from a stranger who just said 'hello'
Is this how
it is supposed to be?
Is life all about
"this is meant to be" ?
Maybe we've got it all wrong
about the pieces, all along
it is where they come from
and how our life has become
maybe it is for us to find out
what the puzzle is all about
But I'm just wondering
Is this how
It is supposed to be?
Wednesday, 21 May 2014
விசுவநாதன், பி.காம்
சுற்றிலும் மலை சூழ்ந்து இருக்கும் அந்த அழகான இயற்கைக் காட்சி மனதிற்குக் குளுமையாக இருந்தது. மேக ராணி மலைப் படுக்கையில் துயில தயாராகிக் கொண்டிருந்தாள். இதுவே நான் ஆழியாருக்குப் போவது முதல் முறை. நிறைய அணைகளை பார்த்திருந்தாலும், ஆழியாரில் ஒரு ரம்மியம் இருந்தது. பிரம்மாண்டமான மலைகளின் பள்ளத்தாக்கில் சற்றும் அசையாத நீர் தேக்கம் . ஒரு ஓவியத்தில் நீர் நிலை , நீல வண்ணமாக உறைந்திருப்பதுப் போல இருந்தது. இங்கே அமர்ந்து இந்தக் காட்சியை நாள் முழுவதும் காணலாம் போலும். இந்த நிசப்தம் பிடித்திருந்தது.
என்னுடன் வந்திருந்தவர்கள் அணையின் அருகில் இருந்த கெஸ்ட் ஹௌசை காண்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அங்கே தான் ரவிச்சந்திரன் 1964 இல் "விசுவநாதன் வேலை வேண்டும்" என்று நடனமாடினார்.
வெளிச்சம் குறைய தொடங்கியதும், நாங்கள் கீழே இறங்கினோம். ஜனத் தொகை முழுவதும் கீழே அந்த பூங்காவில் தான் இருந்தது. எனக்கு அந்த பூங்காவில் ஒன்றுமே இயற்கையாக தெரியவில்லை. குப்பை, கூட்டம், சத்தம் என்று மேலே சொர்க்கம் போலவும், கீழே நரகம் போலவும் தோன்றியது எனக்கு.
இந்த நரகத்தை வேகமாக கடந்து செல்ல வேண்டும். ஆங்காங்கே நிறைய குரங்குகள் வேறு சாப்பாடு பைகளை பறிப்பதற்காக காத்து கொண்டிருந்தன. இன்னும் வேகமாக நடக்க தொடங்கினேன். பாதையின் ஓரத்தில் கீழே ஒரு முதியவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. நான் அவரை கடந்து சென்றதும், ஏதோ முனுமுனுத்தார்.
எனது கால்கள் வேகமாக முன்னேறினாலும் , ஏதோ ஒன்று என்னை தயங்கி நின்று மறுபடியும் அவரை நோக்கி செலுத்தியது. அப்பொழுது தான் அவர்,
"அந்த ஒரு ரூபாய எடுத்து தாங்க" என்று முணுமுணுக்கிறார் என்று தெரிந்தது. அவருக்கு மிக அருகிலேயே ஒரு ரூபாய் நாணயம் ஒன்று கிடந்தது. ஆனால் அவரால் அதை எட்டி எடுக்க முடியவில்லை. அதை எடுத்து அவர் கையில் வைத்தேன். "தூக்கி விட கூட ஆள் இல்ல" என்று சலித்துக் கொண்டார். அவர் அருகே சென்று இரு கைகளையும் பற்றி, அவரை தூக்கி விட்டு நிறுத்தினேன். முதல் முறையாக என்னை பார்த்த அவரது கண்கள், கலங்கின.
"வாட் இஸ் யுவர் நேம் ?" சட்டென்று இந்த கேள்வியை , அதுவும் ஆங்கிலத்தில் நான் எதிர்ப்பார்க்கவில்லை . என் பெயரை கூறினேன்.
"வேர் ஆர் யு ப்ரம் ?"
"மதுரை"
"ஓ ! டெம்பிள் சிட்டி! தட் இஸ் வொய் யு ஆர் லைக் திஸ் " என்று சிரித்தார்.
அவரை சிரிக்க வைத்து விட்டேன் என்று மனதிற்குள் பெருமிதப்பட்டுக் கொண்டேன்.
"மை நேம் இஸ் விசுவநாதன். 1972 பி.காம் டிகிரி ஹோல்டர் " என்று பெருமையாக கூறினார். அவர் கண்கள் மீண்டும் கலங்குவதை கவனித்தேன். என்னால் என்ன செய்ய முடியும்? உதவியற்ற நிலையில் நான் தான் இருப்பது போல உணர்ந்தேன். இது போன்ற இன்னல்களை பணத்தால் தான் செரி செய்ய முடியும் என்று என் சராசரி மூளை சொன்னதைக் கேட்டு , அவர் கையில் சில ரூபாய் நோட்டை வைத்தேன்.
"நோ ! நோ ! ஐ டோன்ட் வான்ட் மனி !"
"இல்ல.. டீ சாப்பிடவாது வெச்சிக்கோங்க" என்று நான் இந்த பணத்தை பிச்சைப் போட வில்லை என்பது போல் காட்டிக்கொண்டேன்.
"ஓ ..டீ க்கா? அப்டினா சரி" என்று வாங்கிக் கொண்டார்.
"ஐ டோன்ட் ஹாவ் எனிபடி . நோ பிரண்ட்ஸ் . நோ பாமிலி . மை லைப் இஸ் ஹாரிபள் . எத்தன கஷ்டங்கள் . நீங்க ஏன் நிக்குறீங்க? ஐ டோன்ட் வாண்ட் டு டிஸ்டர்ப் யு . வெல்கம் டு ஆழியார் . ஹாவ் எ நைஸ் டைம்." என்று கைக் கூப்பி விட்டு நடக்கத் தொடங்கினார்.
வாசலில் எனக்க நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். "மழை வேற வர மாதிரி இருக்கு..எங்க போய்ட இவ்ளோ நேரம்?"
வண்டியில் ஏறினேன். நாங்கள் சரியாக கிளம்பிய பொழுது பெரிதாக மழை பெய்ய தொடங்கியது. வண்டியில் ஒருவர் , "சே ! எப்படி மழை பெய்யுது.. பாவம் பா இந்த குரங்கு எல்லாம் மழை நேரத்துல எங்கே போகும்?" என்று வருத்தப்பட்டார்.
Monday, 12 May 2014
முரண்பாட்டு மூட்டைகள்
என் நீண்ட நாள் ஆசையில் ஒன்றான "கார் டிரைவிங்" ஐ கற்று கொள்ள ஒரு வழியாக சமயம் அமைந்தது. பல இடங்கள் விசாரித்து , ரொம்ப தூரம், ரொம்ப காஸ்ட்லி என்ற பல தடைகளை மீறி கடைசியாக "லேடீஸ் தான சொல்லி கொடுப்பாங்க?" என்ற முக்கியமான விஷயத்தை உறுதி செய்த பிறகு, அந்த டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்தேன்.
அந்த "லேடி" ஒரு போலீஸ் ஆபிசரை போல் தான் இருந்தார். முதல் நாள், கியர் எப்படி போடுவது என்று சொல்லி கொடுத்தார். "இது பழகவே உங்களுக்கு ஒரு வாரம் ஆகும்" , என்றார். இரண்டாவது நாள் எங்கள் தெருவில் இருந்து முன்னேறி மெயின் ரோட்டில் ஓட்ட ஆரம்பித்தேன். காலை 6:30 மணி என்பதால் சாலைகள் காலியாகவே இருந்தது.
"மூணாவது கியர் ல இருந்து நியுட்ரல் வந்துட்டு தாங்க ரெண்டாவது கியர் போடணும். நீங்க நேரா பின்னாடி போடுறீங்க. அது நாலாவது கியர்!" என்று என் அருகில் இருந்தபடி அதட்டினார். எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது. "அய்யோ அப்படியா? ஸாரிங்க" என்றேன்.
கியர் எந்த நிலையில் இருக்கின்றது என்பதே எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. இவ்வாறு நான் பாதி குழப்பத்திலும் மீதி பயத்திலும் இருந்த போது, எங்கள் வண்டியை கடந்து ஒருவர் சைக்கிளில் கீரை விற்றுக்கொண்டு சென்றிருக்கிறா ர்.
"இதுங்களுக்கு வண்டி பழக வேற எடமே கெடைக்காதா " என்று அவர் முனுமுனுத்தது என் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் என் அருகில் இருந்தவரின் காதில் நன்றாகவே விழுந்தது. அடுத்த சில நொடிகள் நடந்த நிகழ்வு - முதல் முறை வானவில் பார்த்த பொழுதோ, முதல் முறை இரயிலில் பயணம் செய்த பொழுதோ எப்படி நம் நெஞ்சில் என்றும் நீங்காமல் பதிந்திருக்குமோ அது போன்ற ஒன்று நிகழ்வாக அமைந்தது - கிட்டத்தட்ட . முதல் முறையாக ஒரு பெண் சரளமாக கெட்ட வார்த்தை பேசுவதை நேரில் கண்டேன்.
"இது என்ன உன் அப்பன் ரோடா? என்னமோ உன் மேல வந்து இடிச்ச மாதிரி பொலம்புற? கீழ இறங்குநேனா பிச்சிருவேன் ராஸ்கல் .. @#$%!&#%&# ..
ஏன் நீ வண்டி பழக கிரௌண்டு கட்டி தாயேன் .. ம*****.. வந்துட்டானுங்க ..பொம்பளைங்க வண்டி ஓட்டுனா இவன்களுக்கெல்லாம் எளக்காரம் .. %@#$@!@.. என்ன வார்த்த பேசுற நீயு .. என்ன மொறைக்குற? ஓடிரு ..#*&#*#^(#)@ "
இந்த அர்ச்சனைக்கு நடுவில் என்னிடம், "ரெண்டாவது கியர் போடுங்க... கிலட்ச மிதிங்க.. அக்சிளிரேடர மெதுவா மிதிங்க" என்றெல்லாம் அவர் சொல்ல மறக்கவும் இல்லை. என் கைகள் ஸ்டீரிங் வீலில் உறைந்தது. இங்கே இப்போது என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. அந்த சைக்கிள் காரனோ மிரண்டுவிட்டான் . ஏதோ சந்தில் நுழைந்து எங்கள் பார்வையில் இருந்து மறைந்து விட்டான்.
சில நொடிகள் காரில் அமைதி நிலவியது. இது தான் புயலுக்கு பின் அமைதியோ? எதாவது பேசி இந்த மௌனத்தை கலைக்க வேண்டும். ஆனால் என்ன பேசுவது? அவரே பேச ஆரம்பித்தார். "இவனுங்களுக்கெல்லாம் இப்படி தாங்க பதிலடி கொடுக்கணும்.. என்ன பயந்துட்டீங்களா?" என்று சிரித்தார்.
"இல்ல இல்ல.." நான் மிகவும் இயல்பாக இருப்பது போல் நடித்தேன்.
"நான் இவன மாதிரி நெறைய பேர பாத்திருக்கேங்க .. கிலட்ச அமுக்கி வண்டிய திருப்புங்க. பொம்பளைங்கனா சமயக்கட்டுலயே கெடக்கணும். வண்டி எல்லாம் ஓட்டுனா இவனுங்களால தாங்க முடியாது"
எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. பேருந்தில் , ரோட்டில் பெண்களை கேலி செய்யும் ஆண்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த சமயத்தில் என் இயலாமையை நினைத்து தான் வெட்கபட்டிருக்கிறேன் . அதற்கு மேல் எதுவும் செய்தது இல்லை. ஆனால் இந்த பெண் , ஒரு படி மேலே போய் , நடு ரோட்டில் சண்டையிட்டு அந்த ஆணை பயந்து ஓட வைத்து விட்டாரே! இதற்கும் தைரியம் வேண்டும் தான்.
அடுத்த நாள் நான் வண்டியில் ஏறிய பொழுது அவரை ஒரு மரியாதையோடு (மரியாதை கலந்த பயம் என்று வாசிக்கவும் ) பார்த்தேன்.
"50 லட்டு ஆர்டர் பண்ணி கான்செல் பண்ணிட்டேங்க " என்றார்.
"ஏங்க லட்டு நல்ல இல்லையா?"
"அட ஏங்க நீங்க வேற.. என் பொண்ணு 952 மார்க்கு தாங்க வாங்கிருக்கு பிளஸ் டூ ல .. 1000 ஆவது வாங்கும்னு நெனச்சேன். கட் ஆப் வேற 155 தான். என்ன படிக்க ஒண்ணும் புரியல .. பிஎஸ்சி ஐடி எப்படிங்க ?"
"மொதல்ல அவளுக்கு என்ன விருப்பம்னு கேளுங்க..அதையே படிக்க வைங்க" என்றேன்.
"ம்க்கும் .. அவளுக்கு பேஷன் டெக்னாலஜி படிக்கணுமாம் .. ஹோட்டல் மானேஜ்மன்ட் படிக்கணுமாம்.. பொம்பள புள்ளைக்கு எதுக்கு இந்த படிப்பெல்லாம்.. துணி தைப்பாங்க .. அங்க புடிக்குது இங்க புடிக்குதுன்னு கைய வைப்பாங்க .. தேவையா.. என்ன கேட்டா காலேஜுக்கே அனுப்ப வேண்டாம்னு தான் சொல்லுவேன்.. நீங்க வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க "
ஏனோ வைரமுத்துவின் வரிகள் நினைவிற்கு வந்தது. அவர் கூறவது போல சிவாஜி படத்தில் வரும் ஷ்ரேயா மட்டும் அல்ல, நாம் அனைவருமே ஒரு வகையில் முரண்பாட்டு மூட்டைகள் தான்.

Saturday, 10 May 2014
Let me be
I'm a dreamer
I'm a wanderer
I'm a free spirit
I have things to see
Let me be
Let me be
Don't direct me
There are places I want to be
Don't shut me in
I need air
Don't judge me 'coz
I don't care
Let me be
Let me be
Don't pull me back
I might leap
Don't tie me down
I might fly
Don't lock me up
I might die
Let me be
Let me be
Subscribe to:
Posts (Atom)